சினிமா

பெரியார் விவகாரம் மூலம் காவிரி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார்கள் - கமல்ஹாசன்

Published On 2018-03-07 07:59 GMT   |   Update On 2018-03-07 07:59 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை திசை திருப்ப மத்திய அரசு தூண்டுதலால் எச்.ராஜா கருத்து தெரிவித்து இருக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். #PeriyarStatue #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள். அந்த கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தற்போது முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியை திசை திருப்பும் வகையில் இந்த பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பி இருக்கிறார்கள்.

பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். பெரியார் உச்சம் மிக உயரமானது. அதை தொட்டு விட முடியாது.

பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை.



எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதை என்னால் ஏற்க முடியாது.

அவர் சொன்ன வார்த்தையை திருப்பி எடுத்தாலும் காயம் காயம்தானே. இது மத்திய அரசின் தூண்டுதலாக கூட இருக்கலாம். இப்போது அவர்கள் அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

எச்.ராஜா மீது பா.ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #PeriyarStatue #KamalHaasan #HRaja 

Tags:    

Similar News