சினிமா செய்திகள்

விஷால்

தள்ளிப்போன விஷால் பட டீசர் வெளியீடு

Published On 2022-07-19 13:10 GMT   |   Update On 2022-07-19 13:10 GMT
  • வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார்.


லத்தி போஸ்டர்

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து 'லத்தி' திரைப்படத்தின் டீசர் இன்று (19-07-2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதன் டீசர் வெளியிடும் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'லத்தி' திரைப்படத்தின் டீசர் 24-07-2022 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Full View
Tags:    

Similar News