சினிமா செய்திகள்

சமந்தா

விவாகரத்துக்கு இது தான் காரணம்.. மனம் திறந்த சமந்தா..

Update: 2022-07-05 09:38 GMT
  • சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை.


சமந்தா - நாக சைதன்யா

இதையடுத்து இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 என்கிற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


கரண் ஜோகர் - சமந்தா

அதில் திருமண வாழ்க்கை குறித்து கரண், சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா திரைப்படங்களில் நீங்கள் திருமண வாழ்க்கையை காட்டிய போது அது நன்றாக இருந்தது. ஆனால், உண்மையில் கே.ஜி.எப் போன்றுதான் திருமண வாழ்க்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News