சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி

பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்

Published On 2022-09-23 12:48 GMT   |   Update On 2022-09-23 12:48 GMT
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.


கொலை

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.


கொலை

சமீபத்தில் வெளியான இப்படதின் முதல் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், 'கொலை' படத்தின் இரண்டாவது பாடல் 'பார்த்த நியாபகம் இல்லையோ' வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த பாடல் ரசிகர்களின் மலரும் நினைவுகளை நியாபகப்படுத்துவதாக கூறப்படுகிறது.


Full View


Tags:    

Similar News