சினிமா செய்திகள்

தனுஷ் படத்தின் கதாபாத்திரம் அறிமுகம்... உற்சாகத்தில் ரசிகர்கள்

Published On 2022-06-10 09:05 GMT   |   Update On 2022-06-10 09:05 GMT
  • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
  • இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி, பிரியா பவானி சங்கர் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோவை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News