சினிமா செய்திகள்
பீஸ்ட் புரோமோ

பூஜா ஹெக்டே இடுப்பை பிடிக்க ஆசைப்பட்ட விஜய்.. வைரலாகும் பீஸ்ட் புரோமோ

Update: 2022-04-10 12:16 GMT
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய புரோமோ வீடியோவில் விஜய் பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.


பீஸ்ட் புரோமோ

இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இது, ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News