சினிமா செய்திகள்
ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர்

ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் - ராமர் வேசத்தில் ஊர்வலம் சென்ற ரசிகர்கள்

Update: 2022-03-25 12:18 GMT
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இதில், ராம ராஜு கதாபாத்திரத்தில் வரும் ராம் சரண் ராமராக உருவெடுத்து ஆங்கியேலருடன் போரிடுவதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார்.இதனால், ஐதராபாத்தில் ராமர் வேடமிட்டு ரசிகர்கள் ஊர்வலம் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.


Tags:    

Similar News