சினிமா செய்திகள்
சிரஞ்சீவி

சிரஞ்சீவியுடன் இணையும் பிரபல இயக்குனர்?

Published On 2022-02-23 12:24 GMT   |   Update On 2022-02-23 12:24 GMT
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி அடுத்து பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்திருந்தார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.


சிரஞ்சீவி - சுகுமார்

இந்நிலையில் ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் இயக்குனர் சுகுமாருக்கு பாலிவுட் படங்களை இயக்க வாய்ப்புகள் வருவதாகவும் இது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இயக்குனர் சுகுமார் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News