தொடர்புக்கு: 8754422764

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் சூர்யாவின் 4 படங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது


ஜெய் பீம்

சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. கூட்டத்தில் ஒருவன் படத்தின் இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


ஓ மை டாக் படத்தின் போஸ்டர்

ஓ மை டாக்

அருண் விஜய், விஜய்குமார், அர்னவ் விஜய் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ஓ மை டாக்’. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்கி உள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.