சினிமா

சென்னை காசி தியேட்டரில் விஜய்யின் சர்கார் பேனர்கள் கிழிப்பு

Published On 2018-11-08 12:05 GMT   |   Update On 2018-11-08 12:06 GMT
சர்கார் படத்தில் இடம் பெறும் சர்ச்சை காட்சிகளை நீக்க கோரி சென்னை காசி தியேட்டரில் வைக்கப்பட்ட பேனர்களை அதிமுகவினர் கிழித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். #Sarkar
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி தியேட்டர் முன் சர்கார் பேனர்களை கிழித்தும் போராட்டம் நடத்தினார்கள்.

தற்போது சென்னை காசி தியேட்டரில் சர்கார் படத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களை அதிமுகவினர்கள் கிழித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஜய் ரசிகர்களும், அதிமுகவினரும் ஒரே இடத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Sarkar
Tags:    

Similar News