சினிமா

சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்

Published On 2018-10-12 10:31 GMT   |   Update On 2018-10-12 10:31 GMT
பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். #SunnyLeone
கர்நாடகாவை ஆண்ட வீரமாதேவி ராணியின் வாழ்க்கையை திரைப்படமாக தமிழ்பட இயக்குனர் வடிவுடையான் இயக்கி வருகிறார். இதில் வீரமாதேவி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் ராணி வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிக்க கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூருவில் அனந்தராவ் சதுக்கம், டவுன் ஹால், மைசூர் வங்கி சதுக்கம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சன்னி லியோனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி அவரது உருவ பொம்மையை எரித்தனர்.



இதுகுறித்து கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:-

வீரமாதேவி வரலாற்று புகழ்மிக்க அரசி. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் நடிப்பதை ஏற்க முடியாது. கர்நாடகாவை சிறப்பாக ஆட்சி செய்த வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிப்பதன் மூலம் கன்னட மக்களை இழிவுப்படுத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

எனவே இப்படத்தின் படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும். இந்த வேடத்தில் சன்னிலியோன் நடிக்கக்கூடாது. இல்லையென்றால் வருகிற நவம்பர் 3-ந்தேதி பெங்களூரில் சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என்றார்.
Tags:    

Similar News