சினிமா

விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு

Published On 2018-10-05 09:24 GMT   |   Update On 2018-10-05 09:24 GMT
நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மெகா ஐகான்’ நிகழ்ச்சியில், கமல்ஹாசனின் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், என் தந்தை விதியை எதிர்த்து நின்றவர் என்று கூறினார். #KamalHaasan #ShrutiHaasan
நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் நாடு முழுவதிலும் பிரபலமானவர்கள் பற்றி புதிதாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ‘மெகா ஐகான்’.

இந்த தொடரில் பிரபலங்களின் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், அவர்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்க மானவர் களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை கொண்டு விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் 5 பிரபலங்களின் பட்டியலில் கமல்ஹாசன், விராட் கோலி, தலாய் லாமா, அப்துல் கலாம், கிரண் பேடி ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.



இந்தத் தொடரின் முதல் 5 எபிசோடுகளை தொகுத்து வழங்குகிறார் நடிகர் மாதவன். இந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் அரசியல் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், “சினிமாவில் அப்பா தனக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கொண்டாடினார்.

எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார். இதுதான் விதி என்றால் அதை எதிர்த்து நின்று துணிந்து கேள்வி கேட்பார். இந்த குணங்களைத் தான் அரசியலிலும் பிரதிபலிக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்’ என்று கூறி இருக்கிறார். #KamalHaasan #ShrutiHaasan

Tags:    

Similar News