சினிமா

96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2018-09-11 15:36 GMT   |   Update On 2018-09-11 15:36 GMT
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்திருக்கும் `96' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘96’. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை அக்டோபர் 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார். 


சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கோவிந்த் மேனன் இசையில் சமீபத்தில் வெளியாகிய `காதலே காதலே' பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha
Tags:    

Similar News