சினிமா

தமிழ் சினிமாவில் இப்போ விலங்கு சீசனாம்.. ஒட்டகத்தை வைத்து படமெடுக்கும் இயக்குநர்

Published On 2018-08-15 12:17 GMT   |   Update On 2018-08-15 12:17 GMT
ஜெகதீசன் சுபு இயக்கத்தில் `சிகை' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக ஒட்டகத்தை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்க இருக்கிறார். #JegadeesanSubu
தமிழ் சினிமா இப்போது விலங்கு பக்கம் தாவி இருக்கிறது. ஜீவா ‘கொரில்லா’ என்ற படத்தில் சிம்பன்சி குரங்குடன் நடித்து வருகிறார். பாம்பை வைத்து உருவாகும் பாம்பன், நீயா-3, பிரபுசாலமன் இயக்கும் ‘2 யானை படங்கள் என்று வரிசையாக விலங்கு படங்கள் உருவாகின்றன.

இது ஆரோக்கியமானதா என்று ஒட்டகத்தை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜிடம் கேட்டோம். ‘நான் அடுத்து ஒட்டகத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.



ஒட்டகத்தை பராமரிக்க ஆகும் செலவு ஒரு ஹீரோவின் சம்பளத்துக்கு இணையானது. ராஜஸ்தானில் வைத்து அவைகளை படப்பிடிப்புக்கு பழக்கி பின்னர் அவற்றிற்கு தேவையான வசதிகள் வழங்கி அழைத்து வந்துள்ளோம். முக்கியமாக விலங்குகளை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் வருவார்கள். குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள்.தமிழ் சினிமா இழந்த குடும்ப ரசிகர்களை திரும்ப தியேட்டர்களுக்கு கொண்டு வரும் முயற்சியே இது. #JegadeesanSubu #Sigai

Tags:    

Similar News