search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகதீசன் சுபு"

    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
    விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் இசையை மே 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கதிர் - ராஜ் பரத் - மீரா நாயர் - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிகை' படத்தின் விமர்சனம். #SigaiReview #Kathir
    ராஜ்பரத் பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். அவர் அனுப்புகிற மீரா நாயர் காணாமல் போகிறார். அவர் சென்ற இடத்திற்கு நேரில் சென்று பார்க்கும் ராஜ் பரத் அதிர்ச்சிக்குள்ளாகிறார். மீராவை யாருக்காக அனுப்பி வைத்தாரோ அவர் செத்து கிடக்கிறார். அருகில் திருநங்கையான கதிர் அழுது கொண்டிருக்கிறார்.

    கடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எப்படி இறந்தார்? மீரா நாயர் எங்கே போனார்? அவரைத் தேடி அலையும் திக் திக் நிமிடங்களே படத்தின் மீதிக்கதை.



    கதையில் முக்கிய திருப்பம் தரும் வேடத்தில் வருகிறார் கதிர். அவரது பாசம், ஏக்கம், பேச்சு என திருநங்கையின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரது நடையில் இருக்கும் நளினம் ஒன்றே போதும். கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கும் கதிருக்கு பாராட்டுக்கள். துணிச்சலான வேடத்தை அனாயசமாக செய்து கைதட்டல் பெறுகிறார்.

    யாரும் செய்ய தயங்கும் வேடத்தில் ராஜ் பரத். செய்யும் தொழிலை நினைத்து விரக்தி அடையும்போதும் மீராவை தேடும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தாங்குகிறார். தங்கையை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு செல்லும் மீரா நாயரின் முடிவு பரிதாபம். ரித்விகாவுக்கு முக்கிய வேடம். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணாக வரும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மல் முருகா என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.



    ஆரண்ய காண்டம், மேற்கு தொடர்ச்சி மலை என்று தமிழில் உலக திரைப்படங்களுக்கு நிகரான படங்கள் உருவாகின்றன. அந்த வரிசையில் இடம்பெறக்கூடிய ஒரு கல்ட் திரில்லர் படமே சிகை. முதல் படத்திலேயே எளிமையான ஒரு கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சிறந்த திரைப்படமாக்கி கொடுத்து இருக்கும் ஜெகதீசன் சுபுவுக்கு பாராட்டுகள்.

    படத்தின் டைட்டிலில் வரும் சென்னையின் இரவுக் காட்சிகளே இவர்களது கூட்டணியின் உழைப்பை பறைசாற்றுகிறது. இறுதிக்காட்சி வரை அது தொடர்ந்து நம்மை படத்தோடு கட்டிப்போடுகிறது.



    படம் முடிந்த பின்னர் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது சின்ன இரக்கமாவது நிச்சயம் ஏற்படும். மனிதாபிமானத்தை தூக்கி நிறுத்திய வகையில் சிகை அனைவரும் கொண்டாடி ஏற்றுக்கொள்ள வேண்டிய படைப்பு. இதுபோன்ற நல்ல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் போவது என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். படம் நாளை இணையத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

    நவின் குமாரின் ஒளிப்பதிவும், ரான் யோகனின் இசையும், அனுசரணின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் `சிகை' தேவையானது. #SigaiReview #Sigai #Kathir #RajBharath #MeeraNair #Riythvika

    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் `சிகை' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக ஒட்டகத்தை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்க இருக்கிறார். #JegadeesanSubu
    தமிழ் சினிமா இப்போது விலங்கு பக்கம் தாவி இருக்கிறது. ஜீவா ‘கொரில்லா’ என்ற படத்தில் சிம்பன்சி குரங்குடன் நடித்து வருகிறார். பாம்பை வைத்து உருவாகும் பாம்பன், நீயா-3, பிரபுசாலமன் இயக்கும் ‘2 யானை படங்கள் என்று வரிசையாக விலங்கு படங்கள் உருவாகின்றன.

    இது ஆரோக்கியமானதா என்று ஒட்டகத்தை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜிடம் கேட்டோம். ‘நான் அடுத்து ஒட்டகத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.



    ஒட்டகத்தை பராமரிக்க ஆகும் செலவு ஒரு ஹீரோவின் சம்பளத்துக்கு இணையானது. ராஜஸ்தானில் வைத்து அவைகளை படப்பிடிப்புக்கு பழக்கி பின்னர் அவற்றிற்கு தேவையான வசதிகள் வழங்கி அழைத்து வந்துள்ளோம். முக்கியமாக விலங்குகளை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் வருவார்கள். குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள்.தமிழ் சினிமா இழந்த குடும்ப ரசிகர்களை திரும்ப தியேட்டர்களுக்கு கொண்டு வரும் முயற்சியே இது. #JegadeesanSubu #Sigai

    ×