சினிமா

ராகுலை சந்தித்தது மகிழ்ச்சி - பா.ரஞ்சித்

Published On 2018-07-11 10:47 GMT   |   Update On 2018-07-11 10:47 GMT
மெட்ராஸ், கபாலி, காலா படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். #PaRanjith #RahulGandhi
அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இப்படத்தை கார்த்தியை வைத்து ‘மெட்ராஸ்’, ரஜினியை வைத்து ‘கபாலி’ படத்தையும் இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கிய ‘காலா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இவர் அடுத்ததாக பாலிவுட் ஸ்டார் அமீர்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். 



இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியல், சினிமா பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதி, மத பாகுபாடு மற்றும் மதச் சார்பின்மைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பற்றி நம் சந்திப்பில் நடந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் முழு செயல் வடிவம் பெறும் என்று நம்புகிறேன். மாறுபட்ட சித்தாந்தங்களை நீங்கள் சந்திப்பது ஊக்கம் அளிக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Tags:    

Similar News