சினிமா

சமூக படமாக உருவாகும் தளபதி 63 - முன்னணி இயக்குநருடன் இணையும் விஜய்

Published On 2018-04-17 08:38 GMT   |   Update On 2018-04-17 08:38 GMT
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் சமூக கருத்தை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், அந்த படத்தை பிரபல இயக்குநர் ஒருவர் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி அரசியல்வாதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. பின்னர் வினோத் அடுத்ததாக அஜித்தை இயக்கவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. 

பின்னர் விஜய்யை இயக்குநர்கள் யாரைாவது சந்தித்தால் விஜய்யை அவர் தான் அடுத்ததாக இயக்கபோவதாக கூறினார்கள். அந்த வரிசையில், மோகன் ராஜா, அட்லி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டன. 



இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்கவிருப்பதாகவும், அந்த படமும் தனி ஒருவன் (மருத்துவ ஊழல்), வேலைக்காரன் (உணவு கலப்படம்) படங்களைப் போன்று சமூக அக்கறையுள்ள படங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதர்பார்க்கப்படுகிறது. 

விஜய் முன்னதாக வேலாயுதம் படத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vijay63 #Thalapathy63

Tags:    

Similar News