சினிமா

நெருக்கமான காதல் காட்சிகளில் அம்ரிதாவுக்கு உதவிய விஜய் ஆண்டனி

Published On 2018-04-02 08:08 GMT   |   Update On 2018-04-02 08:08 GMT
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் காளி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள அம்ரிதா நெருக்கமான காதல் காட்சிகளில் விஜய் ஆண்டனி தனக்கு உதவியதாக தெரிவித்துள்ளார். #Kaali
படை வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அம்ரிதா. அவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து காளி படத்தில் 4 நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இந்நிலையில், தனது சினிமா வருகை குறித்து பேசிய அம்ரிதா,

"நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது".



விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்தது குறித்து அம்ரிதா பேசும் போது, "விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்" என்றார்.

படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்தது குறித்து கூறும்போது, "படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க முடிந்தது" என்றார். 



உற்சாகத்தோடும், நிறைய சாதிக்கும் கனவுகளோடும் இருக்கும் அம்ரிதா, "சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன், அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை திரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை" என்றார். #Kaali #VijayAntony #Amritha

Tags:    

Similar News