சினிமா

தடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி

Published On 2018-03-23 15:15 GMT   |   Update On 2018-03-23 15:15 GMT
சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்து வரும் நிலையில், தடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி.
சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. என்றாலும், ஏற்கனவே செட் போட்டு படப்பிடிப்பு நடத்திய விஜய் படம் உள்பட 4 படங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்தார். 23-ந் தேதி (இன்று) முதல் வெளியூர், வெளிநாட்டு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ படப்பிடிப்புக்காக அந்த படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.



இதில் விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குனர் கோகுல் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல் நாட்டில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் ‘ஜுங்கா’ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே, குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் இந்த படக்குழு புறப்பட்டு சென்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News