சினிமா

பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் - ரித்திகா சிங்

Published On 2018-03-09 09:32 GMT   |   Update On 2018-03-09 09:32 GMT
தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளை பேசும் ‘ஐயாம் சாரி’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங் பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகாசிங்.

அதைதொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ படங்களில் நடித்தார். தற்போது ‘வணங்காமுடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் குறும்படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். இந்தி படகலைஞர்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த குறும் படத்துக்கு ‘ஐயம் சாரி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இது, தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளை பேசும் இசை குறும்படமாக உருவாகி இருக்கிறது. இதை தேசிய விருது பெற்ற அஷ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார். இந்த குறும்படத்தில் நடித்தது ஏன் என்பது குறித்து ரித்திகாசிங் கூறுகிறார்...



“இது பெண்கள் விழிப்புணர்வு குறும்படம். நானும் ஒரு பெண் என்பதால் ஆர்வமுடன் நடித்தேன். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை நிறுத்த வைக்கும் குறும்படமாக இது உருவாகி இருக்கிறது.

பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அதை வற்புறுத்துகிறேன். அதை பலமாக சொல்ல இந்த படம் உதவியது.”

Tags:    

Similar News