சினிமா

விஸ்வாசம் படக்குழுவில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

Published On 2018-02-24 07:16 GMT   |   Update On 2018-02-24 07:16 GMT
சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படக்குழுவில் மேலும் ஒரு முக்கிய பிரபலம் இணைந்திருக்கிறார். #Viswasam #AjithKumar #ThambiRamaiah
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா, காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தம்பி ராமையா ஏற்கனவே அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்விரு படங்களிலும் இவரின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்திருப்பது, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.



சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பை 4 மாதங்களில் முடிக்க படப்பிடிப்பு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். #Viswasam #AjithKumar #ThambiRamaiah
Tags:    

Similar News