சினிமா

காதலர் தினத்தில் சத்தமில்லாமல் டிரெண்டான விஜய்

Published On 2018-02-15 03:07 GMT   |   Update On 2018-02-15 03:07 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காதலர் தினத்தன்று விஜய்யின் தெறிக்கவிடும் சண்டைக்காட்சிகள் படமாக்கபட்டதாக கூறப்படுகிறது. #Vijay #Vijay62
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வந்த நிலையில் படக்குழு மீண்டும் சென்னை விரைந்துள்ளது. 

இதில் காதலர் தினமான நேற்று சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அங்கு படத்தின் முக்கியமான தெறிக்கவிடும் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கபட்டதாக கூறப்படுகிறது. இதில் விஜய்யுடன் நடிகை கீர்த்தி சுரேஷூம் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படப்பிடிப்பின் போது, தன்னை பார்க்க குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைக்கும் விஜய்யின் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்நிலையில், படக்குழு மீண்டும் கொல்கத்தா சென்று மீதமுள்ள காட்சிகளை அங்கு முடிக்கவிருக்கிறதாம். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

படம் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Vijay #Vijay62

Tags:    

Similar News