சினிமா

விஜய் 62 படத்தில் மெர்சல் கனேக்‌ஷன்

Published On 2018-01-23 14:56 GMT   |   Update On 2018-01-23 14:56 GMT
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் ‘மெர்சல்’ படத்தின் கனேக்‌ஷன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விஜய்யின் கத்தி, பைரவா, மெர்சல் ஆகிய படங்களுக்கும் அனல் அரசு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

விஜய் 62 திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News