சினிமா

சன்னி லியோன் படத்தின் தலைப்பு வெளியானது

Published On 2017-12-27 14:34 GMT   |   Update On 2017-12-27 14:34 GMT
பாலிவுட்டில் பல படங்களில் கலக்கி வரும் சன்னி லியோன், தற்போது நடிக்க இருக்கும் தமிழ் படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது.
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது.


முன்னதாக, இப்படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பதற்காக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தலைப்பில் கடைசி எழுத்தை மட்டும் வெளிட்டார்கள். இதற்கு ரசிகர்கள் பல கோணத்தில் சிந்தித்து, பல பட பேர்களை பதிவு செய்தார்கள்.

தற்போது இப்படத்திற்கு ‘வீரமாதேவி’ என்று தலைப்பு வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
Tags:    

Similar News