சினிமா

நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் ரிலீஸ்: தியேட்டர்களுக்கு தட்டுப்பாடு

Published On 2017-12-14 06:16 GMT   |   Update On 2017-12-14 06:17 GMT
நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் ரிலீசாக இருப்பதால் தியேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்வதில் கடுமையான நெருக்கடி இருப்பதாக திரை உலகினர் கூறுகின்றனர்.
சிறிய படங்களை ரிலீஸ் செய்வதில் கடுமையான நெருக்கடி இருப்பதாக திரைஉலகினர் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘திருட்டுப் பயலே-2’, ‘அண்ணாதுரை’, ‘ரிச்சி’, சத்யா படங்கள் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பல சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர தயாராக இருந்தன.

இன்று ‘மாயவன்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இது சிறிய பட்ஜெட் படம் இது போல் மேலும் பல சிறிய படங்கள் நாளை திரைக்கு வருகின்றன.

நாளை ஒரே நாளில் மட்டும் அருவி, பிரம்மா டாட்காம், சென்னை-2 சிங்கப்பூர், கிடா விருந்து, பள்ளிப்பருவத்திலே, வீரா, ஆங்கில படமான கிரிமினல் ஆகிய 8 படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டன.



அதில் ‘வீரா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 7 படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டே நாட்களில் 7 படங்கள் திரைக்கு வருவதால் எத்தனை படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இவை பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்கள். எனவே, இந்த படங்களின் நிலை என்ன ஆகும் என்பது அவை வெளியான பிறகுதான் தெரியவரும்.

கடந்த சில வாரங்களில் வெளிவர இருந்த சில படங்கள் மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. அடுத்த வாரமும் சில படங்கள் வருகின்றன. 22-ந் தேதி பெரிய படங்கள் வர உள்ளன. அதற்கு முன்பு தியேட்டர்களில் இடம் பிடிப்பதற்காகவே இந்த போட்டி.

இந்த ஆண்டுக்கான சிறிய படங்களுக்குரிய அரசு மானியம் பெறுவதற்காகவும், பல சிறிய பட்ஜெட் படங்களை இந்த மாதமே திரைக்கு கொண்டு வருகிறார்கள்.



Tags:    

Similar News