search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருவி"

    • ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும்.
    • சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது.

    பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோவிலை சென்றடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோவிலின் முன் பகுதியில் இந்த அருவியை காண முடியும்.

    ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும். மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும், தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்று அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்துக்கு இது நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அருவி பகுதியில் நீர் சுழல் மற்றும் சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கு யாரையும் குளிக்க அனுமதிப்பது கிடையாது. இருந்தபோதும் உள்ளூர் மக்களும், அருவி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்பவர்களும் அவ்வப்போது இந்த அருவியில் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் தலையூத்து அருவியில் தண்ணீர் வற்றாத ஜீவநதி போல வருகிறது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்
    • சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கோவில், பள்ளிக்கூடம் தொடர்பான காட்சிகள் உள்ளது. நாளை இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். 

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது.
    • அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அருவிக்கு செல்லும் பாதை மற்றும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    • நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.
    • உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    செங்கோட்டை:

    குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் உள்ள நெய் அருவி மற்றும் தனியார் அருவிகளுக்கு செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது குண்டாறு அணைப்பகுதிக்கு மேலே உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை மர்ம நபர்கள் அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட அந்த கதவை மர்ம நபர்கள் அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க அரசு நிதிக்கு காத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • கம்பிகள் உருக்குலைந்து போயின.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி ஊராட்சியில் தாடகநாச்சிபுரத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற மாதங்களில் சுனை நீர் வரும். கோடை காலங்களில் வறண்டும் காணப்படும்.

    1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்ததால் சிறுமலையின் மேல்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டோடி 60 அடி உயரமுள்ள பெரும்பாறையின் கீழ் விழுவதால் குற்றால அருவிபோல் வடிவம் உருவானது. அன்றிலிருந்து இந்த அருவி வெளிஉலகுக்கு தெரிய தொடங்கியது. அதன்பின் இங்கு மழை காலங்களில் தண்ணீர் விழும் நேரங்க ளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மதுரை மாவட்டத்தில் மற்றொரு குற்றாலமாய் உரு வெடுத்தது.

    2001-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அருவிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. அதேபோல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வனத்துறையின் சார்பாக படிகள் கட்டப்பட்டு அருவியின் முன் தளம் மற்றும் பிடி கம்பிகள் அமைக்கப்பட்டு ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டது.

    சுற்றுலா தலமாக்க கோரி அப்போதைய எம்.எல்.ஏ. மாணிக்கம் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்ததை யொட்டி ரூ.6 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதால் வனத்துறை மூலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு, அடிவாரத்தில் இருந்து அருவிக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக் கற்களும், படிக்கட்டு களும் கட்டப்பட்டு அருவி முன்பு தடுப்பு கம்பிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்ப தற்கு இடையே தடுப்புகம்பிகள், ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டன.

    அருவி நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகளுடன் கதவுகள் அமைக்கப்பட்டது. அதன்பின் வனக்குழு மூலம் ரூ.5 குளிப்பதற்கு கட்டணமாக பெறப்பட்டது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின்போது மீண்டும் அருவிக்கு செல்லும் சாலைகள் சீர்குலைந்தும், தண்ணீர் விழும் இடத்தில் தரைத்தளங்கள் பெயர்ந்தும், கம்பிகள் உருக்குலைந்து போயின.

    ஆனால் 5 ஆண்டுகளாகியும் அதை சீரமைக்கும் முயற்சியில் வனத்துறை முன்வர வில்லை. அதனால் தற்போது கற்கள் பெயர்ந்து சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் பாதை எல்லாம் தற்போது தூர்ந்துபோய் செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்து மீண்டும் அடர்வனக் காடாகவே மாறிவிட்டது. மேலும் அருவி நுழைவு வாயில் பகுதியில் பூட்டு போட்டு பூட்டி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதனால் அருவியை காணவரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஓடை நீரில் குளித்து விட்டு செல்கிறார்கள். தற்போது அருவி வறண்டு ஓடையிலும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட காப்பு காட்டுக்குள் நுழைபவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர்.

    மதுரை மாவட்டத்திலேயே இயற்கையின் கொடையாக சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை தண்ணீரில் நோய்களை குணப்படுத் தும் மாமருந்தாகவும் இருந்த அருவி, தற்போது சீர்குலைந்து போய் நிற்பது வேதனைக்குரியதாகும். கோடை, குளிர், மழை என்று இல்லாமல் எல்லா காலங்களிலும் எப்போது சென்றாலும் அந்த பகுதியில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்து செல்வது குளுமையை ஏற்படுத்திவருகிறது. எனவே போர்கால அடிப்படையில் தண்ணீர் அதிகம் இல்லாத காலங்களில் மீண்டும் மராமத்து பணி செய்து தூர்ந்துபோன அருவிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், 5 ஆண்டுகளாகியும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக அருவி தூர்ந்து போய்விட்டது. சுற்றுலா பயணிகள் இன்றளவும் வந்து ஏமாந்து செல்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இயற்கையின் கொடை யாக உள்ள அருவியின் பயனை அனுபவிக்க முடியாமல் காட்சி பொருளாக்கி விட்டார்கள். தற்போது கோடைகாலத்தை பயன்படுத்தி இனியாவது அருவியை சீரமைக்கும் பணியை தொடங்க வனத்துறை முன்வரவேண்டும் என்றனர்.

    ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிர வன் கூறுகையில், வனத்துறையினர் கட்டுப் பாட்டில் குட்லாடம்பட்டி அருகி உள்ளது. மராமத்து பணி செய்ய போதிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் பணி தொடராமல் இருந்து வருகிறது. ஒருமுறை மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்தனர். தமிழக அரசு ஏழைகளின் குற்றால மான இந்த அருவிக்கு கருணை கொண்டு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

    வனத்துறை அதிகாரி கூறுகையில், இந்த அருவியை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் ஆர்வமாக இருக்கி றார். அதனால் மராமத்து பார்ப்பதற்கான திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி ஒதுக்கீடு வந்ததவுடன் பணி முழுவீச்சில் தொடங்கி ஒரே கட்டத்தில் முடிக்கப்பட்டு விடும் என்றார்.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள், பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வரத்து, சராசரி உயரத்திலிருந்து சாரல் போல கொட்டும் தண்ணீர் என பஞ்சலிங்க அருவியின் சிறப்புகளால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    அப்போது அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை முழுவதுமாக மூடி, பல அடிக்கு தண்ணீர் கொட்டும். திடீர் வெள்ளப்பெருக்கினால் அருவியில் கொட்டும் தண்ணீர் சீரான நிலைக்கு திரும்ப பல மணி நேரம் ஆகும்.

    கடந்த 2008ல் சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த 13 சுற்றுலா பயணிகள் தண்ணீரில், இழுத்து செல்லப்பட்டனர். பஞ்சலிங்க அருவியின் சீற்றத்துக்கு அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

    அப்போதைய தி.மு.க., அரசு, உடனடியாக வனத்துறை, இந்து அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உட்பட அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.இக்கூட்டத்தில், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல ஆண்டுகளாகியும் பஞ்சலிங்க அருவி மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.சுற்றுலா பயணிகள் உடை மாற்ற தேவையான அறைகள் இல்லை. கழிப்பிட வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, பஞ்சலிங்க அருவி பாதுகாப்பான அருவி என்ற பெயரை நிலை நிறுத்த அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பஞ்சலிங்க அருவியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து மூலிகை குணங்களுடன் விழும் அருவியில் நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களைகட்டி உள்ளது. 

    • பேச்சிப்பாைறயில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் 20.40 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிபாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது. புயல் எச்ச ரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அணை யில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரை யோர பொதுமக்கள் பாது காப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 788 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1024 கனஅடி தண்ணீரும் வெளி யேற் றப்பட்டு வருகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட் டம் 73.10 அடியாக உள் ளது. அணைக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது.நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் 20.40 அடியாக உள்ளது.

    • மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு
    • பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீயியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து செயற்கை நீரூற்று போல தண்ணீர் வெளியேறி பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் அருவி போல சாலையில் சென்று வீணாகியது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    • பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளது‌. மழை குறைந்ததையடுத்து பேச்சிபாறை அணை யிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது.

    இன்று பேச்சிபாறை அணையில் இருந்து 316 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதை யடுத்து இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது. விடு முறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.

    ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டி யதால் அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.23 அடியாக இருந்தது. அணைக்கு 387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 316 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது. அணைக்கு 356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார்-1 அணை நீர் மட்டம் 14.89 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.99 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.93 அடியாகவும் உயர்ந்துள்ளது.

    • மழையால் ஆறுகளில் வெள்ளம்
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமு மாகவே காட்சியளித்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழையின் வேகம் அதிக மாக இருந்தது. இரணி யல், பாலமோர், கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன் கோடு, முள்ளங்கினா விளை, ஆணைக்கிடங்கு பகுதி களில் தொடர்ந்து மழை பெய்தது.

    இரணியலில் 76 மில்லி மீட்டரும், பாலமோரில் 22.4 மில்லி மீட்டரும் பேச்சிப்பாறை, சிவலோ கம் பகுதிகளில் 19 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பேச்சிப் பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் பெய்து வரும் மழை யின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அனையில் இருந்து மறுகால் திறந்துவிடப்பட்டு உள்ள தால் திற்பரப்பு அருவி யில் தண்ணீர் அர்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

    ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்திருந்த னர். அவர்கள் அருவியில் குளிக்காமல் வெளியில் இருந்து அருவியை சுற்றி பார்த்து சென்றனர். திற்பரப்பு பேரூராட்சி சார்பாக ஊழியர்கள் தடை உத்தரவு தட்டி போர்டு வைத்து இருக்கிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார்-1-18.8, சிற்றார்- 2-19.6, பூதப்பாண்டி-3.2, களியல்-24.2, கன்னிமார்- 3.6, குழித்துறை-18.2, நாகர்கோவில்-1, சுரு ளோடு-12.4, தக்கலை-2, இரணியல்-76, பால மோர்-22.4, மாம்பழத்து றையாறு-16.4, திற்பரப்பு- 24.8.

    கோழிப்போர்விளை- 7.8, அடையாமடை-19.2, குருந்தன்கோடு-5.2, முள்ளங்கினாவிளை- 10.2, ஆணைக்கிடங்கு-15, முக்கடல்-2

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.31 அடியாக உள்ளது. அணைக்கு 921 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.04 அடியாக உள்ளது. அணைக்கு 930 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 14.07 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.17 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 40.60 அடியா கவும், முக்கடல் நீர்மட்டம் 13.60 அடியாகவும் உள்ளது.

    ×