திற்பரப்பு அருவியில் குளிக்க 2-வது நாளாக தடை

பேச்சிப்பாைறயில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் 20.40 அடியாக உள்ளது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிபாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது. புயல் எச்ச ரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அணை யில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரை யோர பொதுமக்கள் பாது காப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 788 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1024 கனஅடி தண்ணீரும் வெளி யேற் றப்பட்டு வருகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட் டம் 73.10 அடியாக உள் ளது. அணைக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது.நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் 20.40 அடியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com