சினிமா

குமரி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல்

Published On 2017-11-30 13:11 GMT   |   Update On 2017-11-30 13:11 GMT
கன மழையால் மிகவும் பாதிப்புக்குள்ளான குமரி மாவட்டத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
தென்மேற்கு வங்கக் கடலில் தூத்துக்குடி அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறி லட்சத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. ஒக்கி என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் புயல் நகரத் தொடங்கியபோது கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக மரங்கள் வேருடன் சாய்ந்தன. தகவல் தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Tags:    

Similar News