சினிமா

வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு புலம்பக் கூடாது: எஸ்.வி.சேகர்

Published On 2017-11-23 11:25 GMT   |   Update On 2017-11-23 11:26 GMT
வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு புலம்பக் கூடாது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார்.
சினிமா கடன் பிரச்சினை தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-

இனி கடன் வாங்கி படம் எடுக்க மாட்டோம், வாங்கினால் சொன்னபடி திருப்பிக் கொடுத்து விடுவோம், வாங்கும் போது நீட்டும் எல்லா வெள்ளைப் பேப்பரிலும் கையெழுத்து போட மாட்டோம்.

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஏழைத் தொழிலாளி கடன் வாங்குறதுக்கும், ஆடம்பர சுகபோக வாழ்க்கைக்கு கடன் வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கடன் இல்லாமல் வாழ்பவரே மிகுந்த சந்தோ‌ஷமானவர்.



இரண்டு வகை வாழ்க்கை முறை. 1 தன் வருமானத்திற்குள் வாழ்வது, 2. தன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நேர்மையாக மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து வாழ்வது.

18 வயதுக்கு மேல் ஆன யாரும் வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்டு புலம்புவதோ, அடுத்தவரை குறை சொல்வதோ ஏற்புடையது அல்ல. சட்டம் துணை நிக்காது.

இதன் மூலம் திரைத்துறையினரையே சாடுவது போல் எஸ்.வி.சேகர் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.


Tags:    

Similar News