சினிமா

திருமணம் செய்வது சுலபம்; வாழ்ந்து காட்டுவது கஷ்டம்: கீர்த்தி கர்பந்தா

Published On 2017-11-21 09:22 GMT   |   Update On 2017-11-21 09:22 GMT
‘புரூஸ்லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த கீர்த்தி கர்பந்தா திருமணம் செய்வது சுலபம், வாழ்ந்து காட்டுவது கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த ‘புரூஸ்லீ’ படத்தில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி கர்பந்தா. இப்போது இந்தியில் ‘கெஸ்ட் இன்லண்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறுகிறார்...

“இந்த படத்தில் ஆடம்பரமாக வாழ்வதைவிட, தனக்கு வரும் கணவர் அன்பாக இருக்க வேண்டும் என்ற குடும்பப் பெண் வேடம். இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் உறவு தொடர்பான கதை.

நம் நாட்டில் திருமணம் செய்து கொள்வது சுலபம். ஆனால் சிறப்பாக வாழ்ந்து காட்டுவது கஷ்டம். அது போன்று திருமணத்துக்கு முன்பும், பின்பும் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசும் படம் இது.



திருமண வாழ்வில் கணவன்-மனைவி இருவரும் நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு உறவைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். என் பெற்றோருக்கு திருமணம் நடந்து 28 வருடங்கள் ஆகிறது. இன்றும் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கையை விரும்புகிறேன். முன்பு பெண்கள் தங்கள் பிரச்சினையை தாங்கிக் கொண்டார்கள். அவ்வளவாக வெளியே காட்டிக் கொள்வது இல்லை. இப்போது தைரியமாக பேசுகிறார்கள். இன்று பெண்கள் விவாகரத்து கேட்டு பிரிவது அதிகமாகி விட்டது. கணவர்-மனைவி உறவு சரியில்லை என்றால் பிரிவது தான் நல்லது.

நான் நடிக்க வரவில்லையென்றால் திருமணம் செய்து கொண்டு இரண்டு, மூன்று குழந்தைகளுக்கு அம்மா ஆகி இருப்பேன்”.

Tags:    

Similar News