சினிமா

கல்விக்காக ரூ.50 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்

Published On 2017-11-11 06:11 GMT   |   Update On 2017-11-11 06:11 GMT
தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்ட மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவர் பொதுவாகவே விளம்பரங்களில் அதிகளவில் நடிப்பதில்லை.

இவ்வாறாக இருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.49 லட்சத்து 70 ஆயிரத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியை செய்திருக்கிறார். இந்த நல்ல மனதிற்கும், நல்ல முயற்சிக்கும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாசும் விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.



விஜய் சேதுபதியின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். விஜய் சேதுபதி எந்த நோக்கத்திற்காக இந்த உதவியை வழங்குகிறாரோ, அந்த நோக்கத்திற்காக மட்டும் அந்த நிதி பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News