சினிமா

விமர்சித்தவர்களை வலைதளத்தில் மறைமுகமாக கிண்டல் அடித்த அமலாபால்

Published On 2017-11-02 08:06 GMT   |   Update On 2017-11-02 08:06 GMT
சொகுசு காரை புதுவையில் பதிவு செய்த விவகாரத்தில் தன்னை விமர்சித்தவர்களை வலைதளத்தில் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார் நடிகை அமலாபால்.
நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ‘பென்ஸ் எஸ்’ ரக வெளிநாட்டு சொகுசு காரை ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த காரை புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டு முகவரியை கொடுத்து அங்குள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அதே காரை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்து நிகழ்ச்சிகளுக்கு அந்த காரில் சென்று வந்துள்ளார். புதுச்சேரியில் காரை பதிவு செய்ய அமலாபால் கொடுத்தது போலி முகவரி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

கேரளாவில் காரை பதிவு செய்தால் 20 சதவீதம் சாலை வரி செலுத்த வேண்டும் என்றும் அதை தவிர்ப்பதற்காக புதுவையில் காரை பதிவு செய்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. இதுபோல் மலையாள நடிகர்கள் பஹத்பாசில், சுரேஷ்கோபி ஆகியோரும் புதுவையில் சொகுசு காரை பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.



இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

“இந்த நேரத்தில் எனக்கு அவசியமாக இருப்பது வேடிக்கையான நகர வாழ்க்கையில் இருந்தும் தேவையற்ற யூகங்களில் இருந்தும் வெளியே வருவதுதான். அதற்காக இப்போதைக்கு படகு பயணம் செல்ல விரும்புகிறேன். அது சட்டத்தை மீறி விட்டேன் என்ற குற்றச்சாட்டாக இருக்காது என்றே நினைக்கிறேன். இதுவும் சட்டமீறலா என்று நண்பர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா?”

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
Tags:    

Similar News