சினிமா

மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்தல்

Published On 2017-10-23 05:38 GMT   |   Update On 2017-10-23 05:38 GMT
மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்த எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக ஜூலை 1-ந் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் கத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 156-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் இயக்குனர் கவுதமன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கதிராமங்கலத்தில் மீண்டும் எண்ணை நிறுவனம் நுழைய அனுமதிக்கமாட்டோம். எங்கள் மண்ணில் சந்தோ‌ஷமாக வாழ்வதற்காக எந்த போராட்டங்களையும் சந்திப்போம். கதிராமங்கலம் பிரச்சினை குறித்து ஐ.நா.சபையில் பேசினேன். மக்களின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வந்தால் தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும்.



நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்தேன் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியது கண்டிக்கத்தக்கது. ஒரு பெரும் பொருளாதாரத்தை முதலீடு செய்து படம் எடுப்பதை வலைதளத்தில் பதிவிடுவதே தவறு.

எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் எச்.ராஜா தனது செயலுக்காக திரைத்துறையினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மெர்சல் படத்தில் மருத்துவர்களை காயப்படுத்துவதாக மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சேவை செய்யும் மருத்துவ பணியை ஒட்டுமொத்தமாக குறை சொல்வதை தவிர்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News