சினிமா

குறும்படத்தில் நடித்த திரிஷா

Published On 2017-10-04 16:53 GMT   |   Update On 2017-10-04 16:53 GMT
தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து குறும்படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை திரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை திரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த படத்தில் திரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்து உள்ளது. இதனால் திரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

இது பற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறும் போது, இந்த விழிப்புணர்வு படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்திருப்பது பிரபல பாடகி சின்மயி. ஏற்கனவே திரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயா, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் சின்மயிதான் இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருந்தார். இதனால் நாங்களும் இக்குறும்படத்திலும் திரிஷாவுக்கு டப்பிங் கொடுக்க வைத்தோம். அது மக்களை மிகவும் கவர்ந்து விட்டது. இதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம், என்றனர்.
Tags:    

Similar News