சினிமா

‘காவியன்’ படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு

Published On 2017-10-03 06:04 GMT   |   Update On 2017-10-03 06:04 GMT
பார்த்தசாரதி இயக்கத்தில் அமெரிக்காவில் உருவாகி இருக்கும் ‘காவியன்’ படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’.

நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளனர். ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பார்த்தசாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சபரீஷ் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த கோர சம்பவத்தில் ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயதுடைய ஒருவர் 50 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றார். ஒரு ஹோட்டலின் 34-ஆவது மாடியில் நின்று கீழே நடந்து கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.



இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. இதில் பிரமிக்கதக்க உண்மை என்னவென்றால் இந்த சம்பவம் நடத்த அதே இடத்தில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவியன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இதே போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றும் அங்கு படமாக்கப்ட்டது. அதில் ஹாலிவுட் நடிகர் நடித்திருந்தார். இதில் அதிர்ச்சி என்னவெனில் கொலையாளி நின்ற அதே 34-ஆம் தளத்தில் தான் அந்தக் காட்சியின் கேமரா வைக்கப்பட்டு ஒளிப்பதிவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News