சினிமா

மீண்டும் சங்கர், கமல் இணையும் இந்தியன்-2

Published On 2017-09-30 12:55 GMT   |   Update On 2017-09-30 12:55 GMT
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தற்போது இந்தியன்-2 படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைய உள்ளனர்.
இயக்குனர் சங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிசியாகவுள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் அஜித், கமல் இருவரில் யாருடனாவது பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் சங்கருடன் இந்தியன்-2 படத்தின் மூலம் மீண்டும் இணைய போவதாக நடிகர் கமல்ஹாசனே அதிகாரபூர்வமாக கூறி உள்ளார்.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் அமைந்தது சங்கர்-கமல் கூட்டணி, இப்படம் இந்தியன் இரண்டாம் பாகமாக எடுக்கவுள்ளார்களாம். மேலும், இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
Tags:    

Similar News