சினிமா

சௌந்தரராஜாவுக்கு கைக்கொடுக்கும் அஸ்ரா கார்க்

Published On 2017-09-17 06:02 GMT   |   Update On 2017-09-17 06:02 GMT
போலீஸ் உயர் அதிகாரியான அஸ்ரா கார்க், தற்போது போலீஸ் அதிகாரியாக ‘அபிமன்யு’ படத்தில் நடித்து வரும் சௌந்தரராஜாவுக்கு உதவி செய்திருக்கிறார்.
தன்னுடைய தனித் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு கனவு போல’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இவரது நடிப்பில் ‘திருட்டுபயலே 2’, ‘கள்ளன்’, ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. தற்போது ‘அபிமன்யு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் உதவி கமிஷனராக நடிக்கிறார். இப்படத்திற்காக போலீஸ் அதிகாரிகளின் உடை, பாவனை, உடல் மொழி உள்ளிட்ட அனைத்து சம்சங்களை தெரிந்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார் சௌந்தரராஜா.

இப்படம் வழக்கமான போலீஸ் படங்கள் போல் இல்லாமல், முற்றிலும் வித்தியாசமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். கமர்ஷியல் படங்களுக்கு உண்டான, சண்டைக் காட்சிகளை படமாக்காமல் யதார்த்தமாக எடுக்க இருக்கிறார்கள். இளம் உதவி கமிஷனர் பதவியில் சேர்ந்தவுடன், அவருக்கு ஏற்படும் நெருக்கடி, இன்னல்கள், அதை அவர் எப்படி கையாள்கிறார் என்பதை படமாக்க இருக்கிறார்கள்.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. காவல்துறை படம் என்பதால், காவல்துறையில் பல சாதனைகளை படத்தை அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அவர்களை வைத்து படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும், அஸ்ரா கார்க்கின் செயல்களை உத்வேகமாக வைத்து செயல்பட்டு வருகிறார் சௌந்தரராஜா.
Tags:    

Similar News