சினிமா

கமல், ரஜினி அரசியல் வருவது குறித்து டி.ராஜேந்தர் கருத்து

Published On 2017-09-13 07:36 GMT   |   Update On 2017-09-13 07:36 GMT
கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அரசியல் வருவது குறித்து நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்திருந்தார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் டி.ராஜேந்தர் தயாரித்து இருந்தார். தற்போது இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது.

தமிழில் சூரி நடித்த கதாபாத்திரதை மட்டும், தெலுங்கு நடிகரை வைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்திற்கு தெலுங்கில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் வெளியாவது குறித்து இன்று டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

இதில், ‘இது நம்ம ஆளு’ தெலுங்கில் வெளியாக இருக்கிறது. தமிழில் ஒரு படத்திற்கு மந்திய, மாநில அரசுகள் இணைந்து 30% ஜி.எஸ்.டி. பிடிக்கிறார்கள். ஆனால், தெலுங்கில் 15% மத்திய அரசு மட்டுமே வாங்குகிறது. மாநில அரசு வாங்குவதில்லை. தமிழ் சினிமா மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

கமல், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசும்போது, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சூப்பர் நாயகன் கமலும் எனது நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிறைய செய்திகள் கேள்விபடுகிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வருவேன், வருவேன் என்று சொல்லாமல், உடனடியாக வந்து மக்கள் பணி செய்தால் சந்தோஷம் என்றார்.

மேலும் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது குறித்து பேசுகையில், நான் ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீஸ் வேலையாக வெளியூருக்கு சென்று விட்டேன். ஒரு நாள் சிம்பு என்னிடம் போனில், மணிரத்னம் சார் என்னை கூப்பிட்டிருக்கிறார் நான் போகவா என்று கேட்டார். மணிரத்னம் மிகப்பெரிய இயக்குனர், அவர் ரஜினி, கமல் ஆகியோரை வைத்து படம் எடுத்தவர். என்னுடைய நண்பர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகபடுத்தியவர். மணிரத்னம் கூப்பிடுக்கிறார் என்றால் அவர் உனக்கு குரு மாதிரி என்று கூறினேன்’ என்றார்.
Tags:    

Similar News