சினிமா

மக்கள் அங்கீகாரம் அளிக்காதிருந்தால் அதுவே எனக்கு கடைசி சுற்றாக அமைந்திருக்கும்: இறுதிச்சுற்று இயக்குனர் உருக்கம்

Published On 2017-09-09 11:02 GMT   |   Update On 2017-09-09 11:02 GMT
இறுதிச்சுற்று படத்திற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்காதிருந்தால் அதுவே எனக்கு கடைசி சுற்றாக அமைந்திருக்கும் என்று இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா உருக்கம் தெரிவித்துள்ளார்.
புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவ தர்‌ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சே சார்பில் இந்திய திரைப்பட தொடக்க விழா புதுவை அலையன்ஸ் பிரான்சே கருத்தரங்கு கூடத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு திரைப் பட விழாவை தொடங்கி வைத்து தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட இறுதிச்சுற்று திரைப்படத்தின் இயக்கு னர் சுதா கொங்கராவுக்கு விருது வழங்கி பேசினார்.

விழாவில் இறுதிச்சுற்று திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா பேசியதாவது:-

பல விருதுகள் இப்படத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், முதல் முறையாக புதுவை அரசிடம் இருந்து கிடைத்த விருது எனக்கு கவுரவமாக இருக்கிறது.



இறுதிச்சுற்று திரைப்படத்துக்கு மக்கள் அங்கீகாரம் கிடைத் திருக்காவிட்டால் எனக்கு இப்படமே கடைசி சுற்றாக அமைந்திருக்கும்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அடுத்த படத்துக்கான கதையை எழுதி வருகிறேன். முழுமையாக தெரிவிக்க இயலாது. நிஜ சம்பவத்தை தழுவியதாக இந்த படம் இருக்கும். முதன் முதலாக விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசு புதுவை அரசு எனக்கு தந்துள்ளது.

இந்த காலத்தில் தயாரிப் பாளர்களிடம் இருந்து பணம் பெறுவதே கடினம். அரசே விருதும், பணமும் தந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது எனக்கு தேசிய விருது போல் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News