சினிமா

‘நெருப்புடா’ படப்பிடிப்பின் போது தீயில் இருந்து தப்பினேன்: விக்ரம் பிரபு

Published On 2017-09-06 09:24 GMT   |   Update On 2017-09-06 09:24 GMT
‘நெருப்புடா’ படப்பிடிப்பின் போது தீயில் இருந்து தப்பியதாக நடிகர் விக்ரம் பிரபு கூறினார்.
விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி நடிப்பில் வருகிற 8-ந்தேதி திரைக்கு வரும் படம் ‘நெருப்புடா’. அசோக்குமார் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து விக்ரம் பிரபு கூறுகிறார்...

“இந்த படத்தில் தீயணைப்பு படை வீரராக நடிக்கிறேன். படம் எடுக்க தயரான போது ‘கபாலி’யின் நெருப்புடா பாடல் ஹிட் ஆகியது. எனவே, அதையே படத்தில் தலைப்பாக தேர்வு செய்தோம்.

இது தீயணைப்புதுறை பின்னணியில் மனித உணர்வுகளை பேசும் கமர்ஷியல் படம். நிக்கி கல்ராணி டாக்டராக வருகிறார்.

இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னை கண்ணகி நகரில் நடந்தது.



தீ சம்பந்தப்பட்ட காட்சியை ஈ.வி.பி.கார்டனில் 150 குடிசை செட்போட்டு, நூற்றுக்கணக்கான துணை நடிகர்களைக் கொண்டு எடுத்தோம். தகுந்த முன்னேற்பாடு, பாதுகாப்புடன் படப்பிடிப்பை தொடங்கினோம். என்றாலும், சில காட்சிகளில் தீயில் சிக்கும் அபாயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, லாவகமாக தப்பினேன். ஆண்டவன் புண்ணியத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் படத்தை முடித்தது மகிழ்ச்சி.

தீயணைப்பு வீரனாக சில காட்சிகளில் நடிக்கவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உண்மையான தீயணைப்பு வீரர்களின் சேவை, தியாகம் மகத்தானது.

இந்த படம் வெளியானதும் தீயணைப்பு படை வீரர்களைப் பார்த்தால் மக்கள் சல்யூட் அடிப்பார்கள்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் நானே.வருங்காலத்தில் நல்ல கதைகள் கிடைத்தால் வேறு ஹீரோக்களையும் வைத்து படம் தயாரிப்பேன்.

அடுத்து ‘பக்கா’ உள்பட 2 படங்களில் நடிக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அப்பாவுடன் நடிப்பேன். இயக்குனர் ஆகவேண்டும் என்று சினிமாவுக்கு வந்தேன். வருங்காலத்தில் கண்டிப்பாக படம் இயக்குவேன்”.

Tags:    

Similar News