search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு படை"

    • வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் முதல் முறையாக பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என உள்துறை மந்திரி கூறினார்.

    டாக்கா:

    உலக அளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறுகையில், இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என தெரிவித்தார்.

    • உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் நேரு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ரமணி (வயது 68). இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரமணி பையூர் பாறை குளம் அருகே நடந்து சென்றார்.

    அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பாறை குளம் பக்கமாக ரமணி சென்றதாக அந்த பகுதியில் உள்ள வர்கள் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த ரமணி உறவினர்கள் குளத்தில் தவறி விழுந்திருக்கலாமோ என்று எண்ணி சிலர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தனர்.

    மேலும் இது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறிந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே நடு ரோட்டில் கெமிக்கல் லாரி பற்றி எரிந்தது.
    • விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திருச்சி பெரமங்கலத்தில் இருந்து சோடியம் பை கார்பனேட் கெமிக்கல் லோடு சுமார் 15 கேன்களில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை ரெட்டில்ஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) கவிராஜ் (26) என்பவர் ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது லாரி என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவர் மோகன்ராஜ் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று லாரியில் இருந்து பயங்கர வெடி சத்தம் ஒன்று கேட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த மற்றொரு டேங்கர் லாரி மீதும் தீ பரவியது. இந்த விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மோகன்ராஜ், கவி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த லாரியை போராடி அணைத்தனர்.

    ×