சினிமா

நாட்டுக்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே: கமல்ஹாசன்

Published On 2017-08-11 09:16 GMT   |   Update On 2017-08-11 09:16 GMT
நாட்டுக்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே என்று நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில், கமல் அறிவித்த அரசியல் கருத்துக்களால் அமைச்சர்கள் விமர்சனத்துக்குள்ளாயினர். இதையடுத்து ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கமல் கட்சி தொடங்குவார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த்தும் பார்வையாளராக வந்திருந்தார்.

இதில் பேசிய கமல், தற்காப்பை விட தன்மானமே முக்கியம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். திராவிடம் நாடு தழுவியது என்று கூறினார்.



பின்னர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், விம்மாமல் பம்மாமல் ஆவனசெய். புரட்சியின் வித்து தனி சிந்தனையே. ஓடி என்னைப் பின் தள்ளாதே. களைத்தெனை தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நான் இல்லை, நாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து மேலும் ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன், சுதந்திரம் பழகு. தேசியமும் தான்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News