சினிமா

'ஆலுமா டோலுமா'வை விட 10 மடங்கு விருந்தளிக்கும் `தலை விடுதலை': `விவேகம்' எடிட்டர் ரூபன்

Published On 2017-08-08 14:53 GMT   |   Update On 2017-08-08 14:53 GMT
'ஆலுமா டோலுமா' பாடலை விட `தலை விடுதலை' பாடலின் காட்சி ரசிகர்களுக்கு 10 மடங்கு விருந்து தரும் என்று `விவேகம்' எடிட்டர் ரூபன் கூறியிருக்கிறார்.
தல அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளிகாகவிருக்கும் படம் 'விவேகம்'. சிவா இயக்கத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில்
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் எடிட்டர் ரூபன் விவேகம் படம் குறித்து பேசும் போது,

'''விவேகம்' படம் கொண்டாடக்கூடிய பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம். திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அஜித் சார் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்களை வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது.



இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'தலை விடுதலை' பாட்டின் காட்சியமைப்பு 'ஆலுமா டோலுமா' பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் 'விவேகம்' ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பணியை மேலும் திறம்பட செய்ய முடிகிறது".

இவ்வாறு கூறினார்.
Tags:    

Similar News