சினிமா

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

Published On 2017-08-03 04:50 GMT   |   Update On 2017-08-03 04:50 GMT
உடல்நலக்குறைவு காரணமாக பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது 94 வயதாகும் அவர், வயோதிகம் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், திடீரென நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.

நடிகர் திலீப்குமார், கடைசியாக ‘கிலா’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். திரையுலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் பொருட்டு, கடந்த 1994-ம் ஆண்டில் திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்து கவுரவித்தது.

திலீப்குமாரின் நடிப்பில் வெளியான ‘தேவதாஸ்’, ‘முகல்-இ-அசாம்’ மற்றும் ‘கர்மா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News