search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Admitted"

    • அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • இதனை தொடர்ந்து போலீசார் ராமச்சந்திரனை உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது53). இவர் துறையூர் - ஆத்தூர் செல்லும் சாலையில் டிராக்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை கடையின் அருகே வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது, நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு ஜெயபாலன் அதிர்ச்சி அடைந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஜெயபாலன் துறையூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (22) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் ராமச்சந்திரனை உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு உள் நோயாளியாக போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துறையூரில் திருட்டு வழக்கில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ராஜ வீதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் நவீன் (வயது 8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு காலை உணவாக உப்புமா வழங்க ப்பட்டது. இதனை நவீன் சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக ஆசிரியர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்ட நவீனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி நவீன், பொங்கல், சுண்டல் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டார். அதனால் ஏற்பட்ட உடல் உபாதையால் அவருக்கு வயிற்று வலி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். #SSAhluwalia #DelhiAIIMS
    புதுடெல்லி:

    மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



    மேற்கு வங்கத்தில் கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மந்திரி அலுவாலியா கலந்துகொண்டார். அங்கிருந்து டெல்லி திரும்பிய பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது உடல்நிலை மோசமடைந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அவரது உதவியாளர் கூறியுள்ளார். #SSAhluwalia #DelhiAIIMS
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Vijayakanth #DMDK
    சென்னை:

    நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுதீஸ் பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். #Vijayakanth #DMDK
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். #DhayaluAmmal
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து தயாளு அம்மாள் மிகவும் துயரத்தில் இருந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து உடனடியாக காரில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும், மு.க.ஸ்டாலினும், அவருடைய குடும்பத்தினரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.

    தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை 4.30 மணிக்கு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.  #DhayaluAmmal #tamilnews 
    வேலூர் ஜெயிலில் கொலை வழக்கில் கைதான கர்ப்பிணி கைதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    ஆற்காட்டை அடுத்த கலவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி முத்துலட்சுமி (வயது 23). இவருக்கு, 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் கடந்த 10-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது.

    பிரசவ வலியால் துடித்த அவரை, சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர். அதன்பேரில் முத்துலட்சுமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் சோதனை செய்தனர்.

    இதில் முத்துலட்சுமிக்கு சாதாரண வயிற்று வலிதான் பிரசவ தேதி இன்னும் ஒரு மாதம் உள்ளதால். அவரை சாதாரணவார்டுக்கு மாற்றியுள்ளோம். முத்துலட்சுமிக்கு ஏற்கனவே பிறந்த 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே நடந்துள்ளது.

    எனவே 3-வது பிரசவமும் இன்னும் 2 வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #DPandian #RajivGandhiHospital
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை இதே பிரச்சினைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் இதே பிரச்சினைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DPandian #RajivGandhiHospital
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


    வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாய்பாயின் குடும்பத்தினரிடம் சென்று நலம் விசாரித்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு வந்த மோடி, வாய்பாயிக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்
    லாலு பிரசாத் யாதவுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில உபாதைகள் ஏற்பட்டதால் அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பாசோதனை செய்யப்பட்டது. #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ காரணங்களுக்காக 6 வார ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

    நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்படும் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வார் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக பெங்களூரு செல்ல இருக்கிறார்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று காலையில் திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில உபாதைகள் ஏற்பட்டன. எனவே அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்துவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து மாலையில் வீடு திரும்பினார்.  #LaluPrasadYadav 
    ×