search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயில் கர்ப்பிணி கைதி அரசு மருத்துவமனையில் அனுமதி
    X

    வேலூர் ஜெயில் கர்ப்பிணி கைதி அரசு மருத்துவமனையில் அனுமதி

    வேலூர் ஜெயிலில் கொலை வழக்கில் கைதான கர்ப்பிணி கைதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    ஆற்காட்டை அடுத்த கலவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி முத்துலட்சுமி (வயது 23). இவருக்கு, 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் கடந்த 10-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது.

    பிரசவ வலியால் துடித்த அவரை, சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர். அதன்பேரில் முத்துலட்சுமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் சோதனை செய்தனர்.

    இதில் முத்துலட்சுமிக்கு சாதாரண வயிற்று வலிதான் பிரசவ தேதி இன்னும் ஒரு மாதம் உள்ளதால். அவரை சாதாரணவார்டுக்கு மாற்றியுள்ளோம். முத்துலட்சுமிக்கு ஏற்கனவே பிறந்த 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே நடந்துள்ளது.

    எனவே 3-வது பிரசவமும் இன்னும் 2 வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×