என் மலர்
செய்திகள்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். #DhayaluAmmal
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து தயாளு அம்மாள் மிகவும் துயரத்தில் இருந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து உடனடியாக காரில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும், மு.க.ஸ்டாலினும், அவருடைய குடும்பத்தினரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.
தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை 4.30 மணிக்கு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். #DhayaluAmmal #tamilnews

Next Story