சினிமா

சிவகார்த்திகேயன் படம்: சமந்தாவின் புதிய நிபந்தனை

Published On 2017-07-28 11:12 GMT   |   Update On 2017-07-28 11:12 GMT
சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் சமந்தா இயக்குநரிடம் சில புதிய நிபந்தணைகளை கூறியிருக்கிறாராம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார்.

இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது.



பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இபப்பபடத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தா, “வெயில் அதிகமாவதற்கு முன்பு தனது காட்சிகளை படமாக்க வேண்டும். அல்லது வெயில் குறைந்த பிறகு நடிக்கிறேன். முடிந்தவரை நேரடியாக என் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நடத்த வேண்டும்” என்று இயக்குனரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சமந்தாவுக்கு ஏற்கனவே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது. எனவே தான் இந்த நிபந்தனை விதித்து இருப்பதாக தெரிகிறது.
Tags:    

Similar News