சினிமா

பிக்பாஸ் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை: மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

Published On 2017-07-13 12:01 GMT   |   Update On 2017-07-13 12:02 GMT
விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரத்தை மீறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும், தமிழ்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியினர் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் ஆவேசமாக பேட்டி அளித்தார். கைது நடவடிக்கை மேற்கொண்டால், சட்டமும், நீதியும் என்னை காப்பாற்றும் என்று அவர் கூறினார்.



இந்த நிலையில் கமி‌ஷனர் அலுவலகத்தில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இன்று ஒரு புகார் அளித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை திட்டும் காயத்ரி ரகுராம் ‘சேரி பிகேவியர்’ என்று கூறி சேரி மக்களை இழிவுபடுத்தியுள்ளார்.

இது வன்கொடுமை தடுப்பு சட்டம், தீண்டாமை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைகுரிய குற்றமாகும்.

சேரி மக்கள் பற்றி தவறான கண்ணேட்டத்தை இந்த நிகழ்ச்சி பரப்புகிறது. எனவே காயத்ரி ரகுராம் மீதும், தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News