சினிமா

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23ம் தேதி வெளியாகிறது

Published On 2017-07-10 09:09 GMT   |   Update On 2017-07-10 11:19 GMT
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நடிகர் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' மிக பிரமாண்டமாக படபிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதுவரை படத்தை பற்றி பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர்.        

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23-ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

வருகின்ற ஜுலை 23-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய ரசிகர்கள் மகிழும் வண்ணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News